கோலாலம்பூர், டிசம்பர்.02-
வர்த்தகர் ஆல்பெர்ட் தே, பூச்சோங்கில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட நடவடிக்கை தொடர்பான காணொளியை வெளியிடுமாறு அந்த வர்த்தகரின் குடும்பம் சார்பில் வழக்கறிஞர்கள் இருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிற்கு கோரிக்கை விடுத்துள்ளளார்.
அந்த காணொளியில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாமல், அது அசல் பதிவாக அது இருக்க வேண்டும் என்று ஆல்பெர்ட் தேவின் மனைவி சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர்களான ராஜேஸ் நாகராஜன் மற்றும் Sachpreetraj கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த காணொளியில் கைப்பேசியின் உள்ளடக்கம் மற்றும் கைதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
சபா சட்டமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றதாக ஆல்பெர்ட் தேவின் குற்றச்சாட்டை ஆராய்வதற்கு கடந்த வாரம் அவரை எஸ்பிஆர்எம் அதிகாரிகள் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.








