Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பகடிவதைச் சம்பவங்களை மறைக்க வேண்டாம்: பள்ளிகளே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பகடிவதைச் சம்பவங்களை மறைக்க வேண்டாம்: பள்ளிகளே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

பள்ளிகளில் நிகழும் பகடிவதைச் சம்பவங்களைப் பள்ளிகள் மறைக்கக்கூடாது. அவ்வாறு மறைத்தால், பள்ளிகளே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் மற்றும் கல்விக் கழகங்களில் நிகழும் எந்தவொரு பகடிவதைச் சம்பவத்தையும் அது சிறிதாக இருந்தாலும் கூட, அதனைப் பாதுகாக்க வேண்டாம் என்று பள்ளிகளுக்கு, குறிப்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பிரதமர் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பகடிவதை பாதுகாக்கப்படுவதும், மறைப்பதும் ஒரு வகையான குற்றமாகக் கருதப்படலாம் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பகடிவதைச் சம்பவங்களுக்கான காரணங்களில் தவறான புரிதல்கள் அல்லது மாணவர் பாதுகாப்பதை விட பள்ளியின் தோற்றத்தைப் பேணுவதற்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவை அடங்கும்.

இவ்விவகாரத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும். சில நேரங்களில் மாணவர்களைப் பாதுகாப்பதை விட பள்ளி பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக இத்தகையச் சம்பவங்களை மறைப்பது உண்டு என்பதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.

இன்று புத்ராஜெயா, பிரசிண்ட் 5, செருலிங் அரசு பணியாளர்களுக்கான வீடமைப்புப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்தப் பின்னர் செய்தியார்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News