கோலாலம்பூர், ஜூலை.13-
பொது மருத்துவமனைகளிலும் அரசாங்கக் கிளினிக்குகளிலும் பகடி வதையைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை அக்டோபர் மாதம் உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வெளியிட உள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் பாதுகாப்பான, இணக்கமான பணியிடச் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது பணியாளர்களின் உளவியல் நல்வாழ்வுக்கான அமைச்சின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார். இந்த வழிகாட்டுதல்கள் பகடி வதைச் சம்பவங்களைப் புகாரளிப்பதற்கான செயல்முறைகள், தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்குமான தடுப்பு நடவடிக்கைகளை விவரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.








