Jul 29, 2026
Thisaigal NewsYouTube
உள்ளூர் மீன்பிடிப் படகின் பணியாளர் ஒருவர் கடலில் குதித்ததில் மூழ்கி உயிரிழந்தார் என அஞ்சப்படுகிறது
தற்போதைய செய்திகள்

உள்ளூர் மீன்பிடிப் படகின் பணியாளர் ஒருவர் கடலில் குதித்ததில் மூழ்கி உயிரிழந்தார் என அஞ்சப்படுகிறது

Share:

கோல கெடா, ஜூலை 10-

கோல கெடா அருகே நேற்று மாலை மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் ரோந்துக் குழுவிடம் இருந்து தப்பிச் செல்வதற்காக, உள்ளூர் மீன்பிடிப் படகின் பணியாளர் ஒருவர் கடலில் குதித்ததில் மூழ்கி உயிரிழந்தார் என அஞ்சப்படுகிறது.

நேற்று இரவு 9:50 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக, கோலா கெடா கடல்சார் மண்டல இயக்குநர் கமாண்டர் நூர் அஸ்ரேயாண்டி இஷாக் கூறினார்.

கோலா கெடா கடற்பரப்பில் இருந்து 4.1 கடல் மைல் தொலைவில் ரோந்துக் குழு படகைப் பிடித்தபோது, திடீரெனப் பணியாளர்களில் ஒருவர் தண்ணீரில் குதித்ததாகவும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, குடிமைத் தற்காப்புப் படை மற்றும் பல உள்ளூர் மீன்பிடி படகுகளின் உதவியுடன் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்!

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்