Oct 18, 2026
Thisaigal NewsYouTube

அந்த தகவலை பகாங் அரண்மனை மறுத்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த தகவலை பகாங் அரண்மனை மறுத்துள்ளது

குவாந்தன்,அக்டோபர் 03-

பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா சுல்தான் அப்துல்லா-வின் அரச திருமணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றதாக கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதியிலிருந்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை பகாங் அரண்மனை மறுத்துள்ளது.

தெங்கு மஹ்கோடா பகாங், தெங்கு ஹசனல் , ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதைப்போல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் - மில் பொய்யான செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த தகவல், ஃபரிதா என்ற ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்று பொது மக்களை பகாங் அரண்மனை கேட்டுக்கொண்டுள்ளது

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →