ஜோகூர் பாரு, நவம்பர்.06-
ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டினால் நீர் விநியோகத் தடைக்கு ஆளான 1.8 மில்லியன் மக்களுக்கு கடந்த அக்டோபர் மாத நீர் கட்டணத்தில் 15 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி அறிவித்துள்ளார்.
கோத்தா திங்கியில் உள்ள ஒரு மணல் குவாரி குளம் உடைப்பெடுத்ததில் ஜோகூர் ஆற்றில் கடந்த ஒரு வார காலமாக கடும் தூய்மைக்கேடு ஏற்பட்டது. இதனால் அதிகமான மக்கள் நீர் விநியோகத் தடைக்கு ஆளாகினர்.
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் மற்றும் அசௌகரியத்தைக் கருத்தில் கொண்டு வீட்டு உரிமையாளர்கள், வழிபாட்டுத்தலங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் முதலியவற்றுக்கு நீர் கட்டணத்தில் 15 விழுக்காடு கழிவு வழங்கப்படுவதாக மந்திரி பெசார் அறிவித்துள்ளார்.








