Jun 30, 2026
Thisaigal NewsYouTube
யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம்
தற்போதைய செய்திகள்

யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம்

Share:

யு மொபைல் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ராஹிம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 13-ஆம் தேதி முதல் அவரது பதவி நியமனமானது அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யு மொபைல் நிறுவனத்தின் தோற்றுநர் வின்சென்ட் டான், கடந்த மார்ச் 12-ஆம் தேதி தலைவர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, துங்கு அமீனா புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வின்சென்ட் டான் இயக்குநர் வாரியத்தின் ஆலோசகராகப் பணியாற்றுவார் என்றும் யு மொபைல் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் டெலிமீடியா பிடிஇ எல்டிடி நிறுவனத்துடன் பங்கு விற்பனை ஒப்பந்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாவார் செத்தியா எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் பங்குகள் 50 விழுக்காட்டைக் கடந்துள்ள நிலையில், துங்கு அமீனா தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

டான் மற்றும் துங்கு அமீனா ஆகியோரால் நிறுவப்பட்ட முதலீட்டு நிறுவனமான 'மாவார் செத்தியா', தற்போது அத்தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கட்டுப்பாட்டுப் பங்கு வகிக்கிறது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த தனியார் நிறுவனங்களை வழிநடத்தியும், நிர்வாகக் குழுக்களில் இடம்பெற்றும், துங்கு அமீனா பரந்த அளவிலான தலைமைத்துவ மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளார் என்று 'யு மொபைல்' நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

யு மொபைல் நிறுவனத்தின் தலைவராக துங்கு அமீனா சுல்தான் இப்ர... | Thisaigal News