தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் 31 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று அக்டோபர் 19ஆம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது. கோலாலம்பூர், விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள தான்ஶ்ரீ கே ஆர் சோமா அரங்கில் இந்த விழாவுக்கு கழகத்தின் நிர்வாக இயக்குநர் மதிப்புமிகு டத்தோ பா.சகாதேவன் தலைமை ஏற்றார்.
பொது சிறுகதை, மரபுக்கவிதை, புதுக்கவிதை கட்டுரை, மாணவர் சிறுகதை என 5 பிரவுகளில் நடத்தப்பட்ட இந்தப்போட்டிகளில் 165 போட்டியாளர்கள் கலநய்து கொண்டனர். ஒரு பிரவுக்கு 6 வெற்றியாளகள் என 30 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு 2,500 வெள்ளியும் 2 வது பரிசு 1750 வெள்ளியும் 3 வது பரிசு 1,250 வெள்ளியும் வழங்கப்பட்டது.
பொது சிறுகதைப் பிரிவில் முதல் பரிசை கிள்ளானைச் சேர்ந்த ஆதிலட்சுமி பெருமாள்,, இரண்டாம் பரிசை இரவாங்கைச் சேர்ந்த கிறிஸ்ட் சின்னப்பன் மூன்றாவது பரிசை சித்தியவானைச் சேர்ந்த கலைமதி ரமேஷ் ஆகிரோர் தட்டிச்சேர்ன்றன்ர்,''
மரபுக் கவிதைப் பிரிவில் முதல் பரிசை கிள்ளானைச் சேர்ந்த குமார் துரைராஜூ,, இரண்டாம் பரிசை பேராவின் செலாமாவைச் சேர்ந்த இளமாறன் நாகலிங்கம் மூன்றாவது பரிசை பினாங்கைச் சேர்ந்த தனசேகரன் கோரக்கி ஆகிரோர் தட்டிச்சேர்ன்றன்ர்,
கட்டுரைப் பிரிவில் கெடா, லூனாசைச் சேர்ந்த குமரசாமி தண்ணீர்மலை னுதல் நிலையிலும் கோவிந்தராஜூ சின்னசாமி இரண்டாம் நிலையிலும் குமரவேலு ராமசாமி மூன்றாம் நிலையிலும் வெற்றி பெற்றனர்.
மாணவர் பிரிவில் தஞ்சோங் மாலிம் மெதடிஸ்ட் இடைநிலைப் பண்ணியச் சேர்ந்த திவ்யா நடராஜா முதல் நிலையிலும் அதே பண்ணியைச் சேர்ந்த தீபிகா லட்சுமி இரண்டாம் நிலையிலும் துன் ஹூசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவராஜ் அரசன் நிலையிலும் வெற்றி பெற்றனர்.
புதுக் கவிதை பிரிவில் கெடா பாடாங் செராய்யைச் சேர்ந்த உதயகுமாரன் கந்தசாமி முதல் பரிசையும் பினாங்கைச் சேர்ந்த ஜெயலெஷ்மி மாணிக்கம் இரண்டாம் பரிசையும் அதே பினாங்கைச் சேர்ந்த புஷ்பா அர்ஜூணன் மூன்றாம் பரிசையும் வென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு முத்தாய்ப்பு அங்கமாக, நூலாசிரியரும் தமிழ் நேசன் பத்திரிகையின் மேனாள் தலைமை ஆசிரியருமான முத்தமிழ் வித்தகர் வே. விவேகானந்தன் சிறப்புறை ஆற்றினார். இலக்கியங்களில் பொதிந்திருக்கும் தமிழ்ர் மாண்பு குறித்து அவர் தமதுரையில் பேசினார்.








