கோலாலம்பூர், ஆகஸ்ட்.04-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்த சும்பாங்கான் அசாஸ் ரஹ்மாவின் 100 ரிங்கிட் உதவித் தொகை தொடர்பில் மோசடிக் கும்பலிடம் மிகுந்த கவனம் தேவை என்று பொதுமக்களுக்கு புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
வரும் தேசிய தினத்தை முன்னிட்டு இந்த 100 ரிங்கிட் ரொக்கம், மக்களின் மைகார்ட் மூலமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், இதனை மோசடிக் கும்பல்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு சாத்தியம் இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா எச்சரித்துள்ளார்.
சம்பந்தப்பட்டக் கும்பல்கள், தங்களை அரசாங்க அதிகாரிகள் என்று அடையாளம் கூறிக் கொண்டு பொதுமக்களை அணுகக்கூடும் என்று அவர் நினைவுறுத்தியுள்ளார்.








