கோலாலம்பூர், செப்டம்பர்.05-
தேசிய விமான நிறுவனமான மலேசிய ஏர்லைன்ஸ், வருகின்ற 2035 ஆண்டில் ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் இதர கண்டங்களில் 106 வழித்தடங்களுக்கு 106 அதிநவீன விமானங்களுடன் சேவையை மேம்படுத்திக் கொள்ளவிருக்கிறது.
தற்போதைய விமானங்களின் 12 வயதுடன் ஒப்பிடுகையில் அந்த நவீன புதிய விமானங்களில் சராசரி வயது 7 ஆண்டுகளாகும். இது மிகுந்த முன்னேற்றமாகும் என்று மலேசிய ஏர்லைன்ஸை வழிநடத்தும் மலேசியா ஏவியேஷன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் இஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அதிநவீன விமானங்களின் பயன்பாட்டை எதிர்கொள்ளும் போது, மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் மதிக்கத்தக்க பிரபல இதர விமான நிறுவனங்களுடன் போட்டியிடத்தக்கதாக விளங்கும் என்பதுடன் பிராந்திய அளவில் அதிகமான வழிதடங்களை முன்னெடுக்க முடியும் என்று இஸாம் இஸ்மாயில் நம்பிக்கை தெரிவித்தார்.








