கோத்தா திங்கி, செப்டம்பர்.22-
ஜோகூர், ஜாலான் கூலாய் – கோத்தா திங்கி சாலையின் 26 ஆவது கிலோமீட்டரில் இன்று காலை 8 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு வாகனமோட்டிகள் மரணமுற்றனர்.
குளுவாங்கியிலிருந்து கோத்தா திங்கியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 47 வயது மாது எதிரே வந்த கார் ஒன்றுடன் எதிரும் புதிரமாக மோதி விபத்துக்குள்ளார்.
இதில் அந்தப் பெண்மணியும், காரைச் செலுத்திய 37 வயது ஆடவரும் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.








