இன்று ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கியுள்ள இபிஎப். சந்தாதாரர்கள், வங்கிகளில் தனிநபர் கடன் பெறும் திட்டமானது, அந்தத் தொழிலாளர் சேமநிதி நிதி வாரியத்தின் சந்தாதாரர்களைவிட அதிக நன்மை அடையப் போவது வங்கிகளே என்று முன்னணி நிதி ஆலோசகர் ஒருவர் கூறுகிறார்.
இபிஎப். சேமிப்பில் இரண்டாவது கணக்கில் உள்ள சேமிப்பைப் பிணையாக பயன்படுத்தி வங்கிகளில் சந்தாதாரர்கள் கடன் பெறும் திட்டத்தை அரசாங்கம் இன்று முதல் தொடக்கியுள்ளது. இபிஎப். சந்தாதாரர்கள், வங்கிகளில் பெறக்கூடிய இந்தக் கடனால் வட்டி விகித ரீதியாக வங்கிகளே அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்று மத்திய பொருளகமான பேங்க் நெகாராவின் உரிமம் பெற்ற நிதி ஆலோசகரான சைடா அஸிலாஹ் அப்துல் ஷுகோர் கூறுகிறார்.
இந்தத் திட்டத்தின் கீழ் இபிஎப். சந்தாதாரர்களுக்கு வங்கிகள் 4 முதல் 5 விழுக்காடு வட்டி விதிக்கின்றன. இது இதர வர்த்தக வங்கிகள் விதிக்கும் 8 முதல் 15 விழுக்காடு வரைக்குமான வட்டி விகிதத்துடன் குறைவாகும். இபிஎப். என்பது சந்தாரர்களின் அந்திம கால சேமிப்பாகும். அதனை பிணையாக பயன்படுத்தி கடன் பெறுவது மூலம் ஆண்டு தோறும் 4 முதல் 5 விழுக்காடு வரை வங்கிகளுக்கு வட்டி செலுத்த இபிஎப் சந்தாரர்கள் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளனர்.
தங்களின் ஒட்டுமொத்த இபிஎப். சேமிப்பிற்கு ஆண்டு தோறும் சராசரி 5.35 விழுக்காடு லாப ஈவு கிடைத்தாலும், அதில் பெரும் தொகை வங்கிகளுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவிட வேண்டி வரும். இது ஒவ்வொரு ஆண்டும் லாப ஈவு மூலம் இபிஎப். பில் கிடைக்கக்கூடிய பெரும் தொகை, சந்தாதாரர்களின் ஒட்டுமொத்த சேமிப்பை உயர்த்த வழிவிடாது. மாறாக, வட்டி செலுத்துவதற்கே சரியாக இருக்கும் என்று அந்த நிதி ஆலோசகர் நினைவுறுத்துகிறார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


