Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய வரலாற்றில் முதல் முறை? திவால் நிலையை எதிர்நோக்கும் ரோஸ்மா மன்சோர்
தற்போதைய செய்திகள்

மலேசிய வரலாற்றில் முதல் முறை? திவால் நிலையை எதிர்நோக்கும் ரோஸ்மா மன்சோர்

Share:

மலேசிய வரலாற்றிலேயே முதல் முறையாக, முன்னாள் பிரதமரின் துணைவியார் ஒருவர் திவால் நிலையைச் சந்திக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது!

லெபனான் நகை நிறுவனம் வழங்கிய 43 ஆடம்பர நகைகளைத் திருப்பித் தராத வழக்கில், டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் 6 கோடியே 75 லட்சம் ரிங்கிட்டை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து அந்த லெபனான் நிறுவனத்தின் மூத்த வழக்கறிஞர் டத்தோ டேவிட் குருபாதம் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி ரோஸ்மாவிடமிருந்து ஒவ்வொரு காசையும் மீட்போம் என்றும், சொத்து பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் இறுதி முயற்சியாக ரோஸ்மாவை திவால் ஆக்க சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் எச்சரித்துள்ளார்.

பல கோடி ரிங்கிட் சொத்துக்களுடன் ஆடம்பரமாக வாழ்ந்த ஒரு முன்னாள் பிரதமரின் துணைவியார் திவாலாகும் அபாயத்திற்கு தள்ளப்படுவது மலேசிய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அதேவேளையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ரோஸ்மாவின் தரப்பு தெரிவித்துள்ளது.

Related News

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

2027 வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு நேரடி ரொக்க உதவி தேவை – பிகேஆர் இளைஞர் பிரிவு

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

ஊழல் ஏற்படும் முன்பே அபாயங்களைக் கண்டறிய வேண்டும் – ஜொஹாரி

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

உரிமம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஈமச் சடங்கு நிறுவனம் வெற்றி – டிபிகேஎல் முடிவை ரத்து செய்தது நீதிமன்றம்

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

மது போதையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் – மியன்மார் நாட்டினர் இருவர் கைது

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

டத்தோ ஸ்ரீ சரவணன், மனைவி, 3 பிள்ளைகளுக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் – திங்கட்கிழமை வழங்குகிறது எஸ்பிஆர்எம்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்

நஜிப் இல்லத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு – தொடர்ந்து கண்காணிக்கும் ஊடகங்கள்