ஷா ஆலாம், ஜூலை.25-
நாட்டில் புகை மூட்டம் மோசமடைந்து வரும் நிலையில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதா, வேண்டாமா? என்பது குறித்து பெற்றோர்கள் முடிவு எடுக்கலாம்.
அதே வேளையில் பல இடங்களின் காற்றின் தூய்மைக் கேட்டுத் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. புகை மூட்டம் மோசமடைந்து வரும் பகுதிகளில் பள்ளிப் பிள்ளைகள் புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
தங்கள் பிள்ளைகளின் உ டல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களைப் பள்ளிக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது குறித்து பெற்றோர்களின் உரிமைக்குரிய விவகாரம். ஆனால், பிள்ளைகள் பள்ளிக்கு வர இயலாத நிலையில் அது குறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே சிலாங்கூர் மாநிலத்தில் மோசமடைந்து வரும் காற்றின் தூய்மைக்கேடு குறித்து அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.








