கடந்த வாரம் புயலால் பாதிக்கப்பட்ட தாமான் கிளெபாங் ஜெயா, தாமான் மெரு 2 சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 164 குடும்பங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உதவிகளை வழங்கினார்.
பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் எம்டி அகின் இன் வாயிலாக தாமான் கிளெபாங் ஜெயா சமூக மண்டபத்திலும் தாமான் மெரு பல்நோக்கு மண்டபத்திலும் மக்களுக்கு 700 வெள்ளி முதல் ஆயிரத்து 400 வெள்ளி வரை நன்கொடை வழங்கப்பட்டது.
வெள்ளத்தாலும் புயலாலும் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய இந்த உதவி நிதி வழங்கப்பட்டது என ஷம்சுல் இஸ்கண்டார் கூறினார்.
பேரிடரை எதிர்கொள்ள மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவும் இதர அரசாங்க பிரிவுகளும் தயார் நிலையில் இருக்க பிரதமர் அன்வார் அறிவுறுத்தியுள்ளதாக ஷம்சுல் கூறினார்.








