Jul 31, 2026
Thisaigal NewsYouTube
38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

Share:

ஹுலு சிலாங்கூர் , ஆகஸ்ட் 24-

நேற்று இரவு படாங் காளி, உலு ரெனிங் - கில் உள்ள முகாம் ஒன்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 38 நபர்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை காப்பாற்றியது.

இச்சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு இரவு 8.04 மணிக்கு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு எட்டு வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.

இந்த சம்பவத்தில் அப்பகுதியில் முகாமிட்டு இருந்த 10 ஆண்கள், 17 பெண்கள், 8 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகள் அடங்கிய 38 பேர் பாதிக்கப்பட்டனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்

Related News