Oct 18, 2026
Thisaigal NewsYouTube

இரண்டு முக்கியத் தலைவர்களை மாமன்னர் சந்திக்கவிருக்கிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இரண்டு முக்கியத் தலைவர்களை மாமன்னர் சந்திக்கவிருக்கிறார்

பெய்ஜிங் ,செப்டம்பர் 20-

சீனாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று வெள்ளிக்கிழமை சீனாவின் இரண்டு முன்னணி தலைவர்களை சந்திப்பதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் சீனப்பிரதமர் லி க்கிங் ஆகியோரை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சந்திக்கவிருக்கிறார்.

மலேசியாவிற்கும் சீனாவிற்கும் தூதரக உறவு மலர்ந்து 50 ஆண்டுகள் பொன்விழாவை கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் சீனா வருகை அமைந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →