May 21, 2026
Thisaigal NewsYouTube
பேரப்பிள்ளையை மானபங்கப்படுத்தியதாக தாத்தா மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பேரப்பிள்ளையை மானபங்கப்படுத்தியதாக தாத்தா மீது குற்றச்சாட்டு

Share:

தனது 15 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 70 வயது முதியவர் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தியப்பகுதியில் இரவு 9 மணியளவில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு வீட்டில் தனது பேட்டியை அரவணைப்ப்பது போல பாசாங்கு செய்து, அவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த முதிவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் தனக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து அந்த முதியவர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 5 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி சித்தி அமினா கசாலி அனுமதித்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த முதியவர் பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News