மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானை நிந்தித்ததாக கூறப்படும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 31 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
சனூசிக்கு எதிராக கடந்த புதன்கிழமை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விசாரணை அறிக்கையை திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் சனூசியிடம் இன்று வெள்ளிக்கிழமை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரஸாருதீன் தெரிவித்தார்.
இன்று காலை 11 மணி வரையில் சனூசிக்கு எதிராக 31 போலீஸ் புகார்கள் பதிவாகியிருப்பதாக குறிப்பிட்ட ஐஜிபி புக்கிட் அமான் சிறப்பு புலனாய்வுக்குழு இந்த விசாரணையை கையாண்டு வருவதாக கூறினார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


