Sep 27, 2026
Thisaigal NewsYouTube
83 வயது மூதாட்டியின் 2011-ஆம் ஆண்டு உயில் செல்லாது: அப்பீ்  நீதிமன்றம்  தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

83 வயது மூதாட்டியின் 2011-ஆம் ஆண்டு உயில் செல்லாது: அப்பீ் நீதிமன்றம் தீர்ப்பு

Share:

83 வயதான எம். சுப்பம்மா எனும் மூதாட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டு எழுதியதாக கூறப்படும் இரண்டாவது உயில் செல்லாது என்றும், 1976-இல் அவர் எழுதிய முதல் உயிலே செல்லும் என்றும் புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுப்பம்மாவின் 11 பிள்ளைகளில், 73 வயது மனோகரன் , 72 கமலவேணி, 69 வயது ராதா மற்றும் 68 வயது சுசீலா ஆகிய நால்வர் தொடுத்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இரண்டாவது உயிலின்படி, சுப்பமாவின் மற்றொரு மகனான 52 வயது முகமட் ஷான் அப்துல்லா என்பவர் மட்டுமே அந்த மூதாட்டியின் ஒரே வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், சுப்பம்மாவுக்கு தமிழ் மட்டுமே தெரிந்த நிலையில், அந்த உயில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு மலாய் மொழியில் விளக்கப்பட்டதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், முகமட் ஷான் அப்துல்லா முன்னிலையிலேயே அந்த உயில் தயாரிக்கப்பட்டதால் அதில் சந்தேகம் இருக்கிறது. எனவே 2013 இல் மரணம் அடைந்த காலஞ்சென்ற சுப்பமாவின் ஒரே வாரிசு முகமட் ஷான் அப்துல்லா எனக்கூறி எழுதப்பட்ட இரண்டாவது உயிலை நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்தத் தீர்ப்பின் மூலம் மனோகரன், கமலவேணி, ராதா மற்றும் சுசிலா ஆகியோர் உட்பட 11 பிள்ளைகளையும் வாரிசுகளாகக் கொண்டு 1976-ஆம் ஆண்டு எழுதப்பட்ட முதலாவது உயியே மீண்டும் நடைமுறைக்கு வருகிறது என்று அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது-

Related News