நாட்டில் குறிப்பிட்டத்துறைகளில் ஒரு தரப்பு மட்டும் ஏகபோக உரிமையைப் பெற்றிருக்கும் நடைமுறையை அரசாங்கம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இத்தகைய ஏகபோக உரிமையினால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. எந்த துறையிலும் அத்துறையை சார்ந்தவர்கள் மத்தியில் போட்டியிடும் ஆற்றல் இருக்க வேண்டும். அத்தகைய நடைமுறையினால் மட்டுமே பயனீட்டாளர்கள் என்ற முறையில் மக்களின் செலவினத்தைக் குறைப்பதற்கு உதவ வல்ல ஓர் உத்தரவாதமாக இருக்க முடியும் பிரதமர் என்று இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
உதாரணத்திற்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையை நிர்வகித்து வரும் பிளஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளலாம். முந்தைய அரசாங்கம் வழங்கியதைத் போல அனைத்துமே ஒரே நிறுவனத்திற்கு வழங்கி விட முடியாது.
ஒரே நிறுவனம் ஏகபோக உரிமையை பெற்றிருக்கும் நடைமுறையை தொடர்ந்து அனுமதிக்க இயலாது என்று பிரதமர் விளக்கினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


