கிள்ளான், நவம்பர்.01-
இம்மாத மத்திக்கு முன்னரே தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நிலவும் என எதிர்பார்க்கப்படும் வட கிழக்கு பருவ நிலையை எதிர்கொள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறை தயார் நிலையில் உள்ளது.
கிட்டதட்ட 16, 000 வீரர்கள் கடமையில் ஈடுபட ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 980க்கும் மேற்பட்ட வேண்டிய உபகரணங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமை இயக்குனர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 3, 600க்கும் அதிகமான பகுதிகள் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயமிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் வெள்ள நிவாரணப் பணிகள் சவால்மிக்கதாக இருக்கும் என்பதால் அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறினார்.
வட கிழக்கு பருவ நிலை இவ்வாண்டு தீபகற்பத்தில் மிதமான அளவிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.








