காஜாங், செப்டம்பர்.27-
ஃபோர் வீல் டிரைவ் வாகனம் ஒன்று இழந்து டோல் சாவடியின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு வயது ஆண் குழந்தை பரிதாபமாக மாண்டது. நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் எட்டு பேர் காயமுற்றனர்.
இந்த சம்பவம் இன்று காலை 10.55 மணியளவில் காஜாங், புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் தாங்கள் காலை 11 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஃபோர் வீல் டிரைவ் வாகனம், ஒரு கார், ஒரு ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வாகனம், ஒரு லோரி சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் டோல் சாவடியின் தடுப்புக் கல்லை மோதி விபத்துக்குள்ளான ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தில் பயணம் செய்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய வேளையில் ஒரு வயது ஆண்டு குழந்தை மட்டும் வாகனத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.
காயமுற்ற எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதையும் அவர் விளக்கினார்.








