Mar 23, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் உயிரிழந்தார், மூவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஆடவர் உயிரிழந்தார், மூவர் படுகாயம்

Share:

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்த வேளையில் இரண்டு பெண்கள், 7 மாத கைக்குழந்தை காயமுற்றனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.07 மணியளவில் மலாக்கா,அலோர் காஜா, ரெம்பியா, அருகில் மலாக்கா தெங்கா - ஜாசின் சாலையில் நிகழ்ந்தது.

விபத்துக்குள்ளான இரு கார்களில் ஒன்று, மலாக்காவிலிருந்து அலோர் காஜாவை நோக்கி வந்து கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதில் தொழிற்சாலை ஊழியரான 33 வயது முகமது ஆரிபின் அப்துல்லா தானி என்பவர் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டுள்ளது என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமா தெரிவித்தார்.

Related News