கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சுற்றுப்பயணிகளிடம் மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர் என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் கூறியுள்ள குற்றச்சாட்டு உண்மையென்றால், அது குறித்து அமைச்சர் உடனடியாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிடம் புகார் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தை எஸ்பிஆர்எம்மிடம் கொண்டு செல்வது மூலமே அமைச்சர் தியோங் கிங் சிங் முன்வைத்துள்ள குற்றச்சாட்டின் தன்மையை உறுதிசெய்ய முடியும் என்று தீபகற்ப மலேசிய குடிநுழைவுத்துறை தொழிற்சங்கத்தின் தலைவர் கலில் நிசா கைருடின் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவரை குடிநுழைவுத்துறை அதிகாரி தடுத்து நிறுத்திய போது, அமைச்சர் தியோங் கிங் சிங் அத்துமீறி நுழைந்து ரகளை புரிந்ததாக கூறப்படுகிறது.

Related News

6 வயதில் முதலாம் வகுப்பு -16 வயதில் மேல்நிலைக் கல்வி நிறைவு: கல்வி அமைச்சு தகவல்

ஐஜேஎம் நிறுவனத்தில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அதிரடிச் சோதனை: 15.8 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள 55 வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிபோங் திபால் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் இருவர் கைது

நீலாய் நகைக் கடையில் ஆயுதமேந்திய கொள்ளை: இரு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

யுகே முதலீடு மோசடி குற்றச்சாட்டை மறுத்த ஐஜேஎம்: விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக அறிவிப்பு


