Mar 24, 2026
Thisaigal NewsYouTube
டிரம்பை துப்பாக்கியால் சுட்டது 20 வயது இளைஞரா? என்ன காரணம்?
தற்போதைய செய்திகள்

டிரம்பை துப்பாக்கியால் சுட்டது 20 வயது இளைஞரா? என்ன காரணம்?

Share:

வாஷிங்டனின், ஜூலை 15-

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தோமஸ் மத்தியூ சிறூக்ஸ் , என்ன காரணத்தினால் இந்த தாக்குதலை நடத்தினான் என்பது குறித்து அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான FBI தீவிர விசாரணை செய்து வருகிறது.

சம்பந்தப்பட்ட நபரான Crooks, / Bethel Park High Park உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றதாகத் தெரிகிறது.
அமெரிக்க ஊடகங்களின்படி, Crooks, பதிவு செய்யப்பட்ட குடியரசுக் கட்சிக்காரர் ஆவார். அந்த நபரின் நோக்கம் குறித்தும், / வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் / அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நபரின் நோக்கம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை" என்று FBI கூறுகிறது.

என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணையை முழுமையாக முடிக்க பல மாதங்கள் வரை ஆகலாம், மேலும் Crooks,- ஸின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கண்டறிய புலனாய்வு அதிகாரிகள் அயராது உழைப்பார்கள் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூட்டால் அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News