ஈப்போ, ஆகஸ்ட்.01-
வயது குறைந்த பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளியின் முன்னாள் பயிற்றுர் ஒருவர், ஈப்போ, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
60 வயது லிம் சின் லியோங் என்ற அந்த பயிற்றுநர், நீதிபதி ஷர்மிளா ஜேசுதாசன் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 7 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஈப்போ, கம்போங் பாலோவில் வாகனமோட்டும் பயிற்சிப் பள்ளியில் அந்த இளம் பெண் மீது கையை வைத்து பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








