புத்ராஜெயா, ஆகஸ்ட்.27-
உயர்கல்விக்கூட மாணவர்களுக்கான 100 ரிங்கிட் மதிப்புள்ள மடானி புத்தக வவுச்சர் அனுகூலத் திட்டம், நாளை ஆகஸ்ட் 28 ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பொதுப் பல்கலைக்கழகங்கள், போலி டெக்னிக் கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் பயன் பெறவிருக்கின்றனர்.
உயர்க்கல்விக்கூட மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் 100 ரிங்கிட்டிற்கான புத்தக வவுச்சர்கள் வழங்கப்படுவதாக உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.








