Oct 2, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலானில் கனமழையில் 35 பள்ளிகள் சேதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
 நெகிரி செம்பிலானில் கனமழையில் 35 பள்ளிகள் சேதம்

சிரம்பான், நவம்பர்.29-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நேற்றிரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழையினால் 35 பள்ளிகள் சேதமுற்றன. இந்த 35 பள்ளிகளும் இயங்கலை மூலம் கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று மாநில கல்வி இலாகா அறிவித்துள்ளது.

பள்ளிகளின் கூரைகள் கடுமையாகச் சேதமுற்ற நிலையில் 35 பள்ளிகளும் சீரமைக்கப்படும் வரை மாணவர்கள் வரும் திங்கட்கிழமை முதல் ஓன்லைன் மூலம் தங்கள் வீடுகளிலிருந்து கல்வி கற்பார்கள் என்று கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய கன மழை காரணமாக தம்பின், ரெம்பாவ், சிரம்பான் மற்றும் போர்ட்டிக்சன் வட்டாரத்தில் உள்ள 35 பள்ளிகள் கடுமையாகச் சேதமுற்றதாக அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. சேதம் குறித்து தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கல்வி இலாகா தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்