கோலாலம்பூர்,ஜன.22
வறிய மற்றும் ஏழை மக்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான Sumbangan Asas Rahmah ரொக்க உதவித் திட்டம் இன்று ஜனவரி 22 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
SARA என்று சுருங்க அழைக்கப்படும் இந்த ரொக்க உதவித் திட்டத்திற்கான ரொக்கத்தொகை இலக்குக்கு உரிய மக்களுக்கு இன்று முதல் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்
கடந்த ஆண்டு 13 கோடி வெள்ளி தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த முறை ஐந்து மடங்கு அதிகமாக தொகை உயர்த்தப்பட்டு, 70 கோடி வெள்ளியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இந்த ரொக்கத் தொகையை 2 லட்சத்து பத்தாயிரம் பெற்றனர். இந்த ஆண்டு 7 லட்சம் பேர் இந்த SARA உதவித் தொகையை பெறுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
குடும்பம் அல்லது திருமணம் ஆகாத மூத்த குடிமக்களுக்கு மாதம் தோறும் தலா 100 வெள்ளியும், திருமணம் ஆகாதவர்களுக்கு தலா 50 வெள்ளியும் வழங்க இந்த SARA உதவித் திட்டம் வகை செய்வதாக பிரதமர் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.








