சிலாங்கூர் மாநில அரசு தனது மொத்த நிலப்பரப்பில் குறைந்த பட்சம் 30 விழுக்காடு காடுகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
தனது வனப்பகுதியை பாதுகாக்கும் பொருட்டு சிலாங்கூர் அரசின் திட்டங்களில் ஒன்றாக ஒரு கோடியே பத்து லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில் காடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டப்பட்டு வருவதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.








