Jul 2, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியில் சிறிய ரக விமானம் அவசர தரையிறக்கம்: இருவர் உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

லங்காவியில் சிறிய ரக விமானம் அவசர தரையிறக்கம்: இருவர் உயிர் தப்பினர்

Share:

லங்காவி, குவா பகுதியில் பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த 'டயமண்ட் டி.ஏ-40' என்ற சிறிய ரக விமானம் இன்று காலை அவசரமாக தரை இறங்கியதில், அதிலிருந்த இருவர் காயமின்றி உயிர் தப்பினர்.

விமானமோட்டும் பயிற்றுவிப்பாளர் முகமட் ஹஃபீஸ் இஸ்கந்தர் மற்றும் பெண் பயிற்சிப் பணியாளர் ஷா இசாத்தி மைசாரா ஆகிய இருவருமே பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். லங்காவி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து காலை 9.54க்குப் புறப்பட்ட இந்த விமானம், 10.20 மணியளவில் எஞ்சின் கோளாறை எதிர்நோக்கியது.

இதையடுத்து, விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் வழங்கப்பட்டு, காலை 10.27 மணிக்கு லங்காவி ஸ்டேடியத்தின் திறந்தவெளி மைதானத்தில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தின் முன்பக்க சக்கரம் சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்து விசாரணை வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்