Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

Share:

அலோர் ஸ்டார், டிசம்பர்.01-

பினாங்கு தனக்கே சொந்தம் என்று உரிமைக் கொண்டாசி வரும் கெடா மாநில அரசு, பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட தடாலடியான மற்றொரு பெரியத் திட்டத்தைக் கொண்டுள்ளது என்று மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

எனினும் கெடா மாநில அரசு கொண்டுள்ள அந்தப் பெரியத் திட்டத்தை இப்போதைக்கு வெளியிட முடியாது என்று சனூசி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் கீழ் உள்ள சிறப்பு நிர்வாகப் பிராந்தியமான ஹாங் காங்கைப் போலவே கெடா மாநில அரசு, தனக்கு கீழ் உள்ள ஒரு சிறப்புப் பிரதேசமாகப் பினாங்கை மாற்ற முடியும் என்று கல்வியாளர் அஹ்மாட் முகமட் மெரிகான் முன்மொழிந்துள்ள பரிந்துரைக்கு பதில் அளிக்கும் வகையில் மந்திரி பெசார் சனூசி இதனைத் தெரிவித்துள்ளார்.

கெடா அரசு கொண்டுள்ள அந்தப் பெரியத் திட்டத்தை இப்போதைக்கு அம்பலப்படுத்தினால் பினாங்கு அரசு உஷராகி விடும். அது ஒரு பொறுத்தமான பதிலை தயாரிப்பதற்கான வாய்ப்பை கொடுக்க கெடா அரசு விரும்பவில்லை என்று சனூசி குறிப்பிட்டார்.

மேலும் பினாங்கிற்கு எதிராக வழக்கு தொடுக்க கெடா மாநிலத்தின் வரலாற்று ஆசிரியர்களும், வழக்கறிஞர்களும் எத்தகைய முகாந்திரங்களைக் கொண்டுள்ளனர் என்பது குறித்து கெடா மாநில ஆட்சிக் குழுவிடம் இன்னும் முன்மொழியப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News