Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் சமூக ஊடகப் பதிவிற்கு மைகாட் அட்டை கட்டாயம்; 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அனுமதி
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் சமூக ஊடகப் பதிவிற்கு மைகாட் அட்டை கட்டாயம்; 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அனுமதி

Share:

மலேசியாவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவுச் செய்வதை உறுதி செய்ய, மைக்காட் அட்டை (MyKad) அல்லது பாஸ்போர்ட் மூலமாக வயது அங்கீகாரம் செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது அரசாங்கம்.

கடந்த ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 'குழந்தைகள் பாதுகாப்பு விதிமுறையின்' கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு '2025 ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் அதிகபட்சமாக 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தொடர்புத்துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் மோசடிகளைத் தடுக்க கடந்த 2022 முதல் இதுவரை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் போலி கணக்குகள் மற்றும் மோசடி விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News