Mar 17, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரரை மோதித் தள்ளியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரரை மோதித் தள்ளியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கடமையில் ஈடுபட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் ரோந்து போலீஸ்காரரை வேண்டுமென்றே காரில் இரு முறை மோதித்தள்ளி படுகாயம் விளைவித்ததாக ஆடர் ஒருவர், ஈப்போ, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

34 வயது T. குணா என்ற அந்த நபர், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 8 மணியளவில் Jalan Chemor, Tanjung Rambutan என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தாம் செலுத்திய WBE 1209 S என்ற பதிவு எண்ணைக்கொண்ட Proton Iriz காரின் மூலம் 34 வயது போலீஸ்காரர் Muhammad Dzulfaizi என்பவரை மோதித்தள்ளி விலா எலும்பு முறியும் அளவிற்F காயம் விளைவித்து விட்டு தப்பிச் சென்று விட்டதாக குணா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இச்சம்பவத்தில் குணாவுடன் இருந்த ஓர் இந்தியப் பெண் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். குற்றாவளி என்று உறுதி செய்யப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குணா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை