Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தமக்கு கொடுத்த நெருக்குதலே காரணமாகும்
தற்போதைய செய்திகள்

தமக்கு கொடுத்த நெருக்குதலே காரணமாகும்

Share:

மஇகாவிலிருந்து தாம் விலகுவதற்கு முக்கிய காரணம், தமக்கு எதிராக பல்வேறு நெருக்குதல் அளிக்கப்பட்டதாக அதன்முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் அம்பலப்படுத்தினார்.
தமக்கு எதிராக மஇகா தலைமைத்துவம் கொடுத்த பல்வேறு நெருக்குதல் மற்றும் தடைகளை இனியும் தாங்கிக்கொள்ள இயலாது என்பதை கருத்தில் கொண்டே கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தத்திற்கு தாம் ஆளானதாக மேலவை உறுப்பினரான டத்தோ சிவராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த சில சம்பவங்கள், மஇகாவின் உறுப்பினர் அந்தஸ்தை துறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தாம் ஆளானதாக அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவருமான டத்தோ சிவராஜ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News