கோலாலம்பூர், டிசம்பர்.12-
சுகாதார அமைச்சின் மருந்தக அதிகாரிகளுக்கான வேலை வாய்ப்பு மீண்டும் திறக்கப்படவிருக்கிறது.
தற்போது குத்தகை அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றவர்கள், காலியாக உள்ள பொறுப்புகளுக்கு நிரந்தர அதிகாரிகளாக நிரப்படுவர்.
அடுத்த ஆண்டு இதற்கான விண்ணப்பங்கள் திறக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








