கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
முதன்மை பங்குகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற முதலீட்டு மோசடியில் பிரதான சந்தேகப் பேர்வழியைப் போலீசார் தேடி வருகின்றனர்.
23 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட இந்த மோசடி தொடர்பில் சிலாங்கூர், ரவாங்கைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபரைப் போலீஸ் தேடி வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபருக்கு பழைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை என்ற போதிலும் அவருக்கு எதிராக 279 போலீஸ் புகார்கள் பெறப்பட்டள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
இந்த மோசடிச் சம்பவம் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








