Sep 21, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத் தேர்தல்: வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கு வாக்காளர்கள் முக்கியத்துவம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கு வாக்காளர்கள் முக்கியத்துவம்

Share:

16-ஆவது ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாழ்க்கைச் செலவு உயர்வு, சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை ஜோகூர் மக்களின் முக்கிய கவலைகளாக உருவெடுத்துள்ளன.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வாடகை மற்றும் அன்றாடச் செலவுகள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினரை பெரிதும் பாதிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இளைஞர்கள் வேலை தேடி ஜோகூரை விட்டு வெளியேறுவதைத் தடுக்க, நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் மாநிலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

அரசியல் நிலைத்தன்மை மட்டுமே மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் என வணிகர்கள் குறிப்பிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் தேர்தல் பிரச்சார காலங்களில் மட்டும் வராமல், எப்போதும் மக்களுடன் இருந்து உள்கட்டமைப்பு மற்றும் பொது நலன் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து தீர்வு காண வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி, 56 இடங்களைக் கொண்ட மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த 16-ஆவது மாநிலத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

Related News

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

கோலாலம்பூரில் திடீர் வெள்ளம்: கார்களில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி

டுரியான் துங்கால் துப்பாக்கிச்சூடு மரண விசாரணையில் தாமதம் ஏன்? - கெப்போங் எம்.பி கேள்வி