மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய முன்னேற்றங்கள் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் விளக்கமளித்துள்ளார்.
கோலாலம்பூர், இஸ்தானா புக்கிட் துங்குவில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போது மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் அன்வாருக்கு சந்திப்பு வழங்கினார்.
இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும், மத்திய அரசின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களுடன் பல்வேறு நடப்பு விவகாரங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








