Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஒழுங்கீன நடவடிக்கை: ஆடவரும். 15 பெண்களும் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒழுங்கீன நடவடிக்கை: ஆடவரும். 15 பெண்களும் கைது

ஜோகூர்பாரு, நவ. 23-


ஜோகூர் மாநிலத்தில் ஒழுங்கீன நடவடிக்கையை துடைத்தொழிக்கும் பொருட்டு போலீசார், இன்று அதிகாலையில் ஜோகூர்பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்னில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஜிஆர்ஓ. வாடிக்கையாளர் உபசரணைப்பணியாளர்களாக வேலை செய்து வந்த 15 அந்நிய நாட்டுப் பெண்களையும் ஓர் உள்ளூர் ஆடவரையும் கைது செய்தனர்.

ஓப் நோடா என்ற பெயரில் அதிகாலை 1.30 மணியளவில் அந்த கேளிக்கை மையத்தை இலக்காக கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலமாட் தெரிவித்தார்.

இதில் அந்த வெளிநாட்டப்பெண்களுக்கு முகப்பிட சேவகராக பணியாற்றி வந்த 35 வயது உள்ளூர் ஆடவரையும், 20 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய 15 பெண்களையும் போலீசார் கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →