நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலயங்களை உள்ளடக்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நெகிரி செம்பிலான் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான அரசும், மலேசிய இந்து சங்கத்தின் நெகிரி செம்பிலான் மாநிலமும் இணைந்து தயாரித்துள்ள இந்த வரலாற்று நூல், நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும் லோபாக் சட்டமன்றத் தொகுதியில் டி.ஏ.பி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருமான சியு சே யோங் -கின் பெரும் முயற்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும்.
நெகிரி செம்பிலான் இந்து ஆலயங்களில் வரலாறுகள் அழிந்துவிடக்கூடாது, அவற்றின் வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும், ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அவை உடைப்படுவதிலிருந்து தடுக்கப்பட வேண்டும், அந்த ஆலயங்களின் வரலாற்றை மேம்பாட்டாளர்கள் புரிந்து கொண்டு அவற்றின் நிலத்தில் கை வைக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காக சியு சே யோங்-கின் தூர நோக்கு சிந்தனையின் அடிப்படையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருனின் ஒப்புதழைப் பெற்று இந்த நூலை அச்சிடுவதற்கான செலவினத்தை மாநில அரசே ஏற்று அதற்கான முன்னெடுப்புகளை எடுத்த பெருமை சியு சே யோங் - ங்கையே சேரும்.
மாநில ஆட்சிக்குழுவில் இஸ்லாம் அல்லாதவர்கள் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவராக பொறுப்பேற்றிருந்த காலத்தின் சியு சே யோங் இந்த பெரும் பணியை நிறை வேற்றி லோபாக் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்


