கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-
போலீஸ்காரர் ஒருவரை வாகனத்தினால் மோதித் தள்ளி, கொல்ல முயற்சி செய்ததாக பெண்மணி ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
31 வயது சாம் ஷான் ஜேர் என்ற அந்தப் பெண்மணி, கடந்த ஆகஸ்ட் முதல் தேதி இரவு 11.15 மணியளவில் கோலாலம்பூர், ஸ்தாப்பாக், ஜாலான் உசாஹாவான் 6 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
ஒரு போலீஸ்காரரான முகமட் ஃபாரில்ராடி சப்ரான் என்பவரை அந்தப் பெண்மணி கொல்ல முயற்சி செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








