குழந்தைகள் மற்றும் இளையோரிடையே அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகள் உயிரிழப்புகளுக்கும் வழிவகுப்பது குறித்து, பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா கவலை தெரிவித்துள்ளார்.
மன உளைச்சலை எதிர்கொள்ளும் இளையோருக்கு உதவுவதற்காக, புகார் அளிக்கும் வழிமுறைகளையும் ஆலோசனைச் சேவைகளையும் மேம்படுத்துவது குறித்து இஸ்தானா நெகாரா ஆலோசனை நடத்தியுள்ளது.
கல்வி அமைச்சு, பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சு, போலீஸ் துறை உள்ளிட்ட அரசாங்க அமைப்புகள் இதில் பங்கேற்றதாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரபூர்வ முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்தைப் பாதுகாப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்றும், மன உளைச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய உதவி வழங்க வேண்டும் என்றும் பேரரசியார் வலியுறுத்தியுள்ளார்.








