பள்ளி மாணவர்களிடையே காணப்படும் வன்முறை மற்றும் தீவிரப் போக்கு அறிகுறிகளைக் கண்டறிந்து கையாள்வதற்கான சிறப்புப் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான என்யுடிபி தெரிவித்துள்ளது.
பள்ளிகளில் ஒழுங்கு விதிமுறைகள் குறித்த பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே ஆசிரியர்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளதாகச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஃபௌஸி சிங்கோன், ஆங்கில நாளிதழிடம் கூறினார்.
மாணவர்களின் வன்முறைப் போக்கை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க, கல்வி அமைச்சு புதிய பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்கும்போது களப்பணியில் உள்ள ஆசிரியர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.








