Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க வாரத்திற்கு 60 நிமிடங்கள் சிறப்பு வகுப்புகள் - கல்வி அமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க வாரத்திற்கு 60 நிமிடங்கள் சிறப்பு வகுப்புகள் - கல்வி அமைச்சு அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

2027-ஆம் ஆண்டுக்கான புதிய பாடத் திட்டத்தில், மாணவர்களின் நற்பண்பு வளர்ச்சி நடவடிக்கைகளுக்காக வாரந்தோறும் 60 நிமிட சிறப்பு வகுப்புகள் ஒதுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நற்பண்பு மேம்பாட்டு திட்டம், மாணவர்களிடையே நாகரிகம், மரியாதை மற்றும் பொறுப்புணர்வை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களிடையே நற்பண்புகளை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முழுமையான முறையில் வளர்த்தெடுக்கும் வகையில் இப்பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்றும் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மழலையர் பள்ளிகளில், இப்பாடத் திட்டம் தினசரி கற்றல் முறையிலும், தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News