Oct 8, 2026
Thisaigal NewsYouTube

நவீன் கொலை வழக்கு: தாக்கியதாக குற்றச்சாட்டை கே. ராகசுதன் மறுப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நவீன் கொலை வழக்கு: தாக்கியதாக குற்றச்சாட்டை கே. ராகசுதன் மறுப்பு

ஆறாம் படிவ மாணவன் நவீன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 4 பேரில் இருவர், சம்பவத்தன்று நவீனை கேலி செய்ததை ஒப்புக் கொண்டாலும், அவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பினாங்கு உயர் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.

27 வயதான கே. ராகசுதன், தானும் மற்றொரு குற்றஞ்சாட்டப்பட்டவரான 26 வயது கே. ததிசனும் தாமான் துன் சார்டோனில் உள்ள பர்கர் கடையில் நவீனை சந்தித்தபோது கேலி செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் அவர்கள் நண்பர்களுடன் செல்லும் இடத்திற்குச் சென்றதாகக் கூறினார்.

எனினும், நவீனின் காயம் மற்றும் மரணத்துக்குக் காரணமாக தானும் மற்ற மூவரும் அவரைத் தாக்கவில்லை என ராகசுதன் திட்டவட்டமாக மறுத்தார். 2017 ஜூன் 9-ஆம் தேதி ஜாலான் காக்கி புக்கிட், கெளுகோர் பகுதியில் நவீன் மற்றும் பிரவீன் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ராகசுதன், ததிசன், எஸ். கோகுலன், வி. ஷர்மா ஆகிய நால்வரும் எதிர்வாதம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →