Jan 8, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங்கில் 8 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய 'தடை செய்யப்பட்ட பாலியல் உபகரணங்கள்' பறிமுதல்
தற்போதைய செய்திகள்

பூச்சோங்கில் 8 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய 'தடை செய்யப்பட்ட பாலியல் உபகரணங்கள்' பறிமுதல்

Share:

பூச்சோங், ஜனவரி.07-

பூச்சோங்கிலுள்ள கிடங்கு ஒன்றிலிருந்து சுமார் 8 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய தடை செய்யப்பட்ட பாலியல் உபகரணங்களைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி, Taman Perindustrian Putra என்ற பகுதியிலுள்ள அக்கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு வகையிலான 18,140 பாலியல் உபகரணங்களை அதிகாரிகள் கண்டறிந்ததாக கோலாலம்பூர் சுங்கத்துறை இயக்குநர் வான் நோரிஸான் வான் டாவுட் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட அப்பொருட்களானது மலேசியாவில் இணையம் மூலமாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அக்கிடங்கின் உரிமையாளரைக் கைது செய்துள்ள அதிகாரிகள், மலேசியாவில் முழுமையாகத் தடை செய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்த குற்றத்திற்காக அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

Related News