ஜூலை 21-
இணையப் பகடிவதை பிரச்சனையை ஒடுக்க நான்கு அமைச்சுகள் ஒன்றிணைந்த சிறப்பு பணிப்படை தோற்றுவிக்கப்படும் என பிரதமர் துறையின் சட்டக்கழக மறுமலர்ச்சி அமைச்சர் Datuk Seri Azalina Othman Said தெரிவித்தார்.
அச்சிறப்புப் பணிப்படையில் தமதமைச்சு, தொடர்பு அமைச்சு, இலக்கவியல் அமைச்சு, உள்துறை அமைச்சு ஆகியவை இடம் பெற்றிருக்கும் என அவர் கூறினார்.
குற்றவியல் சட்டம் 574-இல் திருத்தம் மேற்கொள்வது குறித்து அப்பணிப்படை கலந்துரையாடும்.
இணையப் பகடிவதைக்கான அர்த்தம் நிர்ணயிக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்ட சட்டவரைவு வரும் அக்டோபரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் Datuk Seri Azalina சொன்னார்.
இணையப் பகடிவதை ஒருமுறை நடக்கும் சம்பவம் அல்ல. தனிநபரை இழிவுப்படுத்தும், அச்சுறுத்தும், அவர்களின் தரவுகளை பரப்பும் அக்குற்றச்செயல் கட்டுப்படுத்தப்படவில்லையெனில் நிச்சயம் தொடரும்.
அது தனிமனித உரிமைக்கும், மக்களாட்சி முறைக்கும் தீங்கு விளைவிக்கும்.
ஆதலால் ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், சிங்கப்பூர் முதலிய நாடுகளிடம் இருந்து இணையப் பகடிவதைகளை களையும் வழிமுறைகளை கற்றுக் கொள்ள மலேசியா தயாராக உள்ளதாக DATUK SERI AZALINA குறிப்பிட்டார்.








