Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் முன்னாள் கணவரின் அந்தரங்க காணொளிகளை பரப்பிய பெண்ணுக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் முன்னாள் கணவரின் அந்தரங்க காணொளிகளை பரப்பிய பெண்ணுக்கு அபராதம்

Share:

தனது முன்னாள் கணவர் மற்றும் மற்றொரு பெண் தொடர்பான அந்தரங்க காணொளிகளை வைத்திருந்ததுடன் அவற்றை பரப்பிய குற்றத்தை ஒப்புக்கொண்ட 25 வயதுடைய பெண்ணுக்கு ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2,800 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

தமக்கு எதிரான குற்றச்சாட்டை அப்பெண் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி நூர் அஃபிகா ராதியா சைனுரின் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குற்றப்பத்திரிகையின்படி, அப்பெண் ஆபாசமான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை தனது கைப்பேசியில் சேமித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இந்த குற்றம் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி, மலாக்கா தெங்கா மாவட்டத்தின் ஜாலான் ஆயர் குரோ லாமா பகுதியில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News